Saturday, 3 November 2012

ரஜினி – கமல் இணைந்து நடிக்காதது ஏன்?

 

16 வயதினிலே, மூன்று முடிச்சு, ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் உட்பட பல படங்களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்தனர்.
 ஒரு காலகட்டத்துக்கு பிறகு, இருவரும் தனித்தனி ஹீரோக்களாக உருவெடுத்தனர். அதன்பிறகு, அவர்கள் இருவரையும் இணைத்து படமெடுக்க நடந்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதற்கான காரணத்தை, கமல் கூறும் போது, “நானும், ரஜினியும் இணைந்து நடிக்கும் போது, எங்களது சம்பளம், இரண்டாக பிரிக்கப்பட்டது.


         

இருவருமே தனித்தனியாக நடிக்க தொடங்கியபோது, எங்களது சம்பளம் இரு மடங்கானது. அதோடு, இருவரும் அந்த சம்பளத்துக்கு தகுதி உடையவர்கள் என்பதை எங்களால் நிரூபிக்க முடிந்தது. அதன் பின் தான், தொடர்ந்து இருவரும், தனித்தே நடிப்பது என்ற ஒப்பந்தத்தை எங்களுக்குள் எடுத்துக் கொண்டோம். அதை இப்போது வரை தொடர்ந்தும் வருகிறோம், என்றார்.


 


Saturday, 6 October 2012

செட்டிநாடு சிக்கன்

 

  சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து., துண்டுகள் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் (2), நறுக்கிக் கொள்ளவும், தக்காளி (1) நறுக்கிக் கொள்ளவும், இஞ்சி (1"), பூண்டு (4 பல்) தட்டிக் கொள்ளவும். 
  மசாலா பொடி தயாரிக்கும் முறை (வற்றல் மிளகாய் (4), மிளகு (1/4 தேக்கரண்டி), தனியா (1 1/2 தேக்கரண்டி), சீரகம் (1 தேக்கரண்டி), பட்டை (1"), ஏலக்காய்(2), கிராம்பு (3), வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு, தேங்காய் துருவல் (1 1/2 மேசைக் கரண்டி) சேர்த்து அரைத்து உபயோகிக்கவும்).
  வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி., பட்டை (1/2"), கிராம்பு (2), கறிவேப்பிலை சிறிது போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் சிக்கன் கலவையைச் சேருங்கள். இத்துடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து சிக்கனை நன்றாக வேக வையுங்கள். எண்ணை மிதந்ததும் இறக்கவும்.

Tuesday, 18 September 2012

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சியாமளா

திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சியாமளா: மாற்றுத் திறனாளிகளுக்கென, கடந்த ஐந்தாண்டுகளாக அவ்வப்போது, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறோம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

 பெல்சியா சங்கம், டி டீட்சியா சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கும், தங்கள் நிறுவனங்களில் வேலை போட்டுத் தர வேண்டுமென, அவர்களிடம் கேட்டுக் கொள்வோம். மேற்கண்ட அமைப்புகளின் பல நிறுவனங்களும், மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் வேலை வாய்ப்பளித்திட முன் வந்தது, எங்களின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி. கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் உடல் ஊனமற்றவர்கள் என, மொத்தம், 1,268 மாற்றுத் திறனாளிகளுக்குப் பல தனியார் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் என, பல வற்றிலும் வேலை பெற்றுத் தந்துள்ளோம்.

 நாங்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக ஊழியர்கள் அனைவருமே முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர், இன்றும் தந்து வருகின்றனர். அனைவரின் கடும் உழைப்பிற்குக் கிடைத்த பரிசே மத்திய அரசால், எனக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருது, கடமையைத் தவறாமல் செய்தால், அதுவே கடவுள் பணி.

Thursday, 13 September 2012

நாங்களும் பதிவுலகில்...
எங்கள் அன்னை சரோஜா அறக்கட்டளை கடந்த மூன்றாண்டுகளாக , எண் 14, முதல்தளம், கொண்டமபுரம் தெரு, திருவள்ளூர்- 602001. தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. 

எங்கள் அறக்கட்டளை மூலம் மாற்று திறனாளிகளுக்கு கணினி பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குதல், கிராம மகளிருக்கும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் பல்வேறு சிறுதொழில் பயிற்சி அளித்து தொழில் துவங்க அனைத்து உதவிகளும் நாங்களே செய்துவருகிறோம். 

எங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளை தெரிவிக்க இந்த பிளாக்கை ஆரம்பித்துள்ளோம். நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்மிக்கையோடு...என்றும் உங்கள்..

தங்கமணி. க.
நிறுவனர்,
அன்னை சரோஜா பவுண்டேசன்.
திருவள்ளூர்-602001.
Cell: 09750055618.