Tuesday 18 September 2012

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சியாமளா

திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சியாமளா: மாற்றுத் திறனாளிகளுக்கென, கடந்த ஐந்தாண்டுகளாக அவ்வப்போது, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறோம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

 பெல்சியா சங்கம், டி டீட்சியா சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கும், தங்கள் நிறுவனங்களில் வேலை போட்டுத் தர வேண்டுமென, அவர்களிடம் கேட்டுக் கொள்வோம். மேற்கண்ட அமைப்புகளின் பல நிறுவனங்களும், மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் வேலை வாய்ப்பளித்திட முன் வந்தது, எங்களின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி. கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் உடல் ஊனமற்றவர்கள் என, மொத்தம், 1,268 மாற்றுத் திறனாளிகளுக்குப் பல தனியார் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் என, பல வற்றிலும் வேலை பெற்றுத் தந்துள்ளோம்.

 நாங்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக ஊழியர்கள் அனைவருமே முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர், இன்றும் தந்து வருகின்றனர். அனைவரின் கடும் உழைப்பிற்குக் கிடைத்த பரிசே மத்திய அரசால், எனக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருது, கடமையைத் தவறாமல் செய்தால், அதுவே கடவுள் பணி.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேசிய விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

Rasan said...

//கடமையைத் தவறாமல் செய்தால், அதுவே கடவுள் பணி. //
அருமை.

தேசியவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

Unknown said...

அருமை மாற்றுத் திறனாளிகள் பற்றின செய்திகளை சொன்னதற்கு தொடர்ந்து பதிவுகளை போடுங்க

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

உங்கள் திறன் வளரட்டும்

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr